இடஒதுக்கீடு அமல் - 4
இத்தனை வருடங்களில், மிகச் சில அரசுப் பள்ளிகளே, தரமானவை என்று கூறத்தக்க அளவில் உள்ளன. இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் (முக்கியமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!) இயன்ற அளவில், அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துக் கொள்வதன் மூலம், ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த அடிப்படைக் கல்வியை தர இயலும். மேலும், அரசும், பெரு நிறுவனங்களும் இணைந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனிப்பள்ளிகளே கூடத் தொடங்கலாம்.
இதனால், அம்மாணவர்கள் பிற எலீட் மாணவர்களுடன் ஒப்பீடு செய்யப்பட வேண்டிய அவசியமின்றி, நன்றாகப் படித்து, உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான திறனை, தங்கள் உழைப்பால் பெற வல்ல சாதகமான சூழலும் அமையும். தனியார் நிறுவனங்களில் வேலையில் இடஒதுக்கீடு என்பதை விட இது எவ்வளவோ மேல் என்பது என் கருத்து !!! பெண்கல்வி பின் தங்கியிருந்த காலகட்டத்தில், பெண்களுக்காகவே பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. அதனால், நல்ல பலனும் கிட்டியது. அது போலவே, ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கென பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்குவது நிச்சயம் பலனளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
சாதி அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகள் சமூகத்தில் நிலவுவதை மறுக்க இயலாது. அதனால் நிகழும் வன்முறையையும், அவமானங்களையும், நம் சமூகத்திலிருந்து முற்றாக விலக்க நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் தான் ! அதே நேரத்தில், இடஒதுக்கீட்டுக்குள் இருக்கும் / இருக்க விரும்பும் எல்லா தரப்பினரும் ஒரே மாதிரியான அளவில், சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவிப்பதில்லை என்பதும் உண்மை தானே ! சமூகத்தில் எல்லா வகையிலும் பின் தங்கியுள்ள ஒரு சாராரின் முன்னேற்றத்திற்கு வேண்டி ஏற்படுத்தப்பட்ட (இடஒதுக்கீடு தரும்) ஒரு திட்டம், அரசியல் தரகர்களால், தற்போது எண்ணிக்கை விளையாட்டாய் மாறி விட்டது கொடுமை தான் ! அதாவது, சாதிகளும் இருக்கின்றன, சாதி அரசியலும் மென்மேலும் பலமடைந்து வருகிறது.
தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும்போது சாதி பேதமில்லா சமுதாயம் என்ற இலக்கு ஒரு மிக நீண்ட கனவு என்று தான் கூற வேண்டும். நம் நாட்டில் கல்வி குறித்த அனைத்து விவாதங்களும், அரசியல்வாதிகளின் சுயநலத்தால், இடஒதுக்கீடு என்ற ஒன்றை நோக்கியே பாய்வது சரியானதா ?? ஏனெனில், இடஒதுக்கீடு (மட்டுமே!) சமூக நீதிக்கு தீர்வாக அமைய முடியாது.
என்றென்றும் அன்புடன்
பாலா
பி.கு: அனானிகளும் பின்னூட்டமிடலாம் !
14 மறுமொழிகள்:
Test !
//இடஒதுக்கீடு (மட்டுமே!) சமூக நீதிக்கு தீர்வாக அமைய முடியாது//
நிச்சயமாக ஆனால் இடஒதுக்கீடு இல்லாமல் சமூக நீதி அமையவே முடியாது.... வேண்டுமென்றால் சமூக நீதியின் முதல்படி இடஒதுக்கீடாது இருந்து போகட்டும் அதை ஏன் எதிர்க்க வேண்டும்...
//அதே நேரத்தில், இடஒதுக்கீட்டுக்குள் இருக்கும் / இருக்க விரும்பும் எல்லா தரப்பினரும் ஒரே மாதிரியான அளவில், சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவிப்பதில்லை என்பதும் உண்மை தானே !//
அதனால் தான் இடஒதுக்கீட்டில் SC,ST, BC, MBC என்று பிரிவுகள் உள்ளன, இன்னும் சில மாநிலங்களில் SCயில் கூட class-1,class-2,class-3 என உட்பிரிவுகள் உள்ளன.
//சாதி அரசியலும் மென்மேலும் பலமடைந்து வருகிறது.//
சாதியரசியல் எப்போதுமே இருந்து வருகின்றது, என்ன முன்பு உயர்சாதியரசியல் இருந்தது அப்போது அதெல்லாம் யார் கண்ணுக்கும் தெரியாது, இப்போது பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் அரசியல் சென்றுகொண்டுள்ளது, அரசியலில் சாதி என்பதை பற்றி தொடர் எழுதிக்கொண்டுள்ளேன், அதன் இரண்டாம் பாகத்தில் லபக்குதாசு ஒரு பின்னூட்டமிட்டிருப்பார் அதை இங்கே தரவிரும்புகிறேன்
// வட மாவட்டங்களில் பல தொகுதிகள் முன்பு முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் என அடையாளப்படுத்தப் பட்டிருந்தன. ஆனால் இன்று அவைகள் எல்லாம் வன்னியர் தொகுதிகள், தலித் தொகுதிகள் என்று வகைபடுத்தப்படும் நிலையை எட்டியுள்ளது,//
(மேல் உள்ள வரிகள் நூறு சத உண்மையென்னும் பட்சத்தில் )முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் பற்றி அலட்டிக்கொள்ளாத நம் சமூகமும், ஊடகமும் வன்னிய தலித் தொகுதிகளாகும்போது சாதீய ஆபத்து என அலட்டிக்கொள்கிறதோ என எண்ணத்டோன்றுகிறது .
//அரசியல் தரகர்களால், தற்போது எண்ணிக்கை விளையாட்டாய் மாறி விட்டது கொடுமை தான் ! //
பத்ரியின் ஒரு பதிவில் இட்ட பின்னூட்டம் இதற்கு பதில் சொல்லும்
சனநாயகத்தின் நான்கு தூண்களில் ஊடகத்தூணை 75%மேல் ஆக்கிரமித்து, நீதிமன்ற தூணை கிட்டத்தட்ட முழுவதும் ஆக்கிரமித்து வேணுகோபால்கள் மாதிரி ஆட்கள் அரசு இயந்திர தூணையும் ஆக்கிரமித்து சமூகநீதிக்கு எதிராக இருக்கும்போது வேறு வழியே இல்லாமல் சமூகநீதிக்கு ஆபத்பாந்தவன்களாக இருப்பது மரவெட்டி அரசியல்வாதிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் தான்.... என்னை பொறுத்தவரை மற்ற மூன்று உயர்சாதி வெறி ஆதிக்கம் கொண்டவர்களின் தூண்களை விட அரசியல்வாதிகள் நிரம்பியிருக்கும் தூண் எவ்வளோ பரவாயில்லை...
//அதனால் தான் இடஒதுக்கீட்டில் SC,ST, BC, MBC என்று பிரிவுகள் உள்ளன, இன்னும் சில மாநிலங்களில் SCயில் கூட class-1,class-2,class-3 என உட்பிரிவுகள் உள்ளன.
//
நான் கூற வந்தது வேறு ! எத்தரப்பினர் அதிகம் கஷ்டப்படுகிறார்களோ / சோதனைக்குள்ளாகிறார்களோ அவர்கள் இடஒதுக்கீட்டால் மிக அதிகம் பயன் பெற வேண்டும் என்பதே. ஆனால், இப்போது சாதி அரசியலால், எண்ணிக்கை விளையாட்டு தான் அரங்கேறுகிறது. அதாவது, இவ்வளவு மக்கள் வரையறுக்கப்பட்ட ஒரு categoryயில் இருந்தால் (அவ்வளவும் சாதிக்கட்சிகளுக்கு ஓட்டுக்கள் அல்லவா?) அவர்களுக்கு இவ்வளவு சதவிகிதம் இடஒதுக்கீடு தந்தே ஆக வேண்டும் என்ற clamouring பற்றிய கருத்தே அது !
My comment in http://kuzhali.blogspot.com/2006/09/blog-post_10.html
********************************
குழலி,
//உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.
//
உங்கள் அறச்சீற்ற அறைகூவல் எல்லாம் பிரமாதமாகத் தான் உள்ளது, குழலி ! எனக்கென்னவோ, உங்களுக்கு நன்றாகப் புரிவதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள் என நினைக்கிறேன். அதாவது, பிற்பட்டோரில், இடஒதுக்கீட்டினால் பயனடைந்து முன்னேறியவர்களை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கினால், இன்னும் வாய்ப்பே கிடைக்காதவர்கள் பயனடைவார்கள் என்பது தான் சாராம்சம். பிற்பட்டவரில் பொருளாதாரத்தில் கீழிருப்பவரில் இன்னும் அதிகமானோர் பயன் பெறக்கூடிய இவ்விஷயத்தை நீங்கள் எதிர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இருப்பதாகத் தோன்றவில்லை. உடனே "பணம் இருக்கு, சூழல் சரியில்லை" என்று ஆரம்பிக்காதீர்கள் ! உயர்சாதியினர் இதில் ஏதாவது விஷமத்தனம் செய்வார்கள் என்று அச்சமா, புரியவில்லை !!!
அப்புறம், உங்களது "இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா" என்ற பதிவு, க்ரீமி லேயர் பொய்களை உடைக்கும் ஒரு authentic document என்று எண்ணிக் கொள்ள உங்களுக்கு உரிமை இருக்கிறது.
open competition-இல் க்ரீமி லேயரை வரையறுப்பது பற்றி நீங்கள் கூறியிருப்பது கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் உயர்சாதி மாணவருக்கு ஒரு 2-3% இடஒதுக்கீடு கொடுப்பது (அதாவது, 69% disturb செய்யாமல்!) உங்களுக்கு ஒப்புதலா என்று தெரியவில்லை ! அதென்ன, க்ரீமி லேயர் பரிசோதனையை உயர்சாதியினரிடமிருந்து ஆரம்பித்து ஒரு 10 வருஷங்கள் கழித்து தான், OBC க்ரீமி லேயர் பக்கம் வர வேண்டும் என்கிறீர்கள், ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தலாமே !!!!! சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும் தான் சாதி, பணக்காரர்கள் எல்லாருமே பொதுவாக ஒரு சாதி தான் !
//இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.
//
இது மாதிரி பொதுமைப்படுத்தி தயவு செய்து பேசாதீர்கள். இடஒதுக்கீடே தேவையில்லை என்று ஏதாவது நான் எழுதினேனா ? இந்த 27% லாவது, க்ரீமி லேயரை வரையறுத்தல் வேண்டும் என்பது தான் என் கருத்து !!!
*********************
"அதென்ன, க்ரீமி லேயர் பரிசோதனையை உயர்சாதியினரிடமிருந்து ஆரம்பித்து ஒரு 10 வருஷங்கள் கழித்து தான், OBC க்ரீமி லேயர் பக்கம் வர வேண்டும் என்கிறீர்கள், ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தலாமே !!!!! சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும் தான் சாதி, பணக்காரர்கள் எல்லாருமே பொதுவாக ஒரு சாதி தான் !"
நான் ஐ.டி.பி.எல். -ல் வேலை செய்து கொண்டிருந்த போது, தொழிலாளி கேடரில் இருந்த ஒரு மூத்த தொழிலாளி ஒரு விசித்திர வாதம் வைத்தார். அவர் சீனியர், ஆகவே நல்ல சம்பளம். இளம் நிலையில் உள்ள அதிகாரிகளை விட அதிக சம்பளம். ஆனாலும் கூட அவர் சொல்வது என்னவென்றால் இன்கம் டேக்ஸை ஆஃபீசர்களிடம்தான் வாங்க வேண்டும் என்று. தொழிலாளிகளிடம் கூடாதாம். என்ன கூறினாலும் புரிந்து கொள்ள மறுப்பார். அவரிடம் பேசுவதே வீண். அதே மாதிரித்தான் குழலி விஷயமும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Thanks, Raghavan !
பாலாஜி அவர்களே,
எந்தப்படம் என்று ஞாபகமில்லை...கவுண்டமணி பிச்சைக்காரனாக வருவார்...ஆனால் பிச்சை எடுத்து முடித்ததும் மொபைல் போனில் டாக்ஸி கூப்பிட்டு அதில் ஏறி செல்வார்...அது போலத்தான் இட ஒதுக்கீடும்....backword creamy layer-க்கு தன் பங்கை தன்னை விட தாழ்ந்தவருக்கு விட்டு குடுக்க மனசில்லை...மேல் சாதியை பார்த்து கை காட்டுகிறது...கேட்டால் சமூக நீதி புடலங்காய்..அது இது என்று...ஆயிரத்தெட்டு வியாக்கியானம்...ராமதாசு...திருமாவை நடத்தும் விதமே இவர்கள் எந்த அளவு சமூக நீதி காவலர்கள் என தெரிவித்து விடும்...இவர்கள் வீட்டின் பின் பக்கத்தில் அலுமினிய டம்ளரில் செயின் கட்டி வைத்திருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை...பத்திரிகை துறையில் மேல்சாதி இத்தனை சதவிகிதம்...நீதி துறையில் மேல் சாதி இத்தனை சதவிகிதம் என கணக்கெடுத்துப்போட்டு சமூக நீதிக் காவல் புரியும் குழலி மாதிரி ஆட்கள் வன்னியர் கட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கு எத்தனை இடங்கள் அல்லது தொகுதிகள்(கம்பல்சரி ரிசர்வ்ட் தொகுதிகள் தவிர) அல்லது எத்தனை சதவிகிதம் நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோர் என எடுத்துப்போடட்டுமே...இவர்கள் வரையில் சமூகநீதியை எப்படி கட்டி காப்பாற்றுகிறார்கள் என தெரிந்து விடும்
அனானிமஸ்,
கருத்துக்களுக்கு நன்றி.
//சமூக நீதிக் காவல் புரியும் குழலி மாதிரி ஆட்கள் வன்னியர் கட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கு எத்தனை இடங்கள் அல்லது தொகுதிகள்(கம்பல்சரி ரிசர்வ்ட் தொகுதிகள் தவிர) அல்லது எத்தனை சதவிகிதம் நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோர் என எடுத்துப்போடட்டுமே...
//
குழலி தான் பதில் தர வேண்டும், இதற்கு !
எ.அ.பாலா
//குழலி தான் பதில் தர வேண்டும், //
எத்தனை இடத்தில் தான்பா பதில் தருவது, நிசமாவே தெரிந்துகொள்ள ஆசையென்றால் என் பாமக பதிவுகள் http://kuzhali.blogspot.com/2005/04/1.html
http://kuzhali.blogspot.com/2005/05/2.html
படித்து பாருங்கள்...அதில் சொல்லியிருப்பேன், மிச்சத்துக்கு அங்கே வாங்க...
kuzhali, CT,
nanRi !
பால உங்கள் கடைசி பின்னூட்டத்திற்கு பதில் அளித்துள்ளேன்
http://kuzhali.blogspot.com/2006/09/blog-post_10.html
நன்றி
//
குழலி / Kuzhali said...
பால உங்கள் கடைசி பின்னூட்டத்திற்கு பதில் அளித்துள்ளேன்
//
I have seen that ! Thanks !
""""//குழலி தான் பதில் தர வேண்டும், //
எத்தனை இடத்தில் தான்பா பதில் தருவது, நிசமாவே தெரிந்துகொள்ள ஆசையென்றால் என் பாமக பதிவுகள் http://kuzhali.blogspot.com/2005/04/1.html
http://kuzhali.blogspot.com/2005/05/2.html
படித்து பாருங்கள்...அதில் சொல்லியிருப்பேன், மிச்சத்துக்கு அங்கே வாங்க...
"""""
பதில் சொல்லிட்டாரோன்னு உண்மையிலேயா ஆச்சரியத்தோட போய் அந்த பா.ம.க. கொள்கை??? தன்னிலை விளக்க கட்டுரைகளை படித்து சலித்தேன்....நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் என்கும் தட்டுப்படவில்லை...முதன் முதலில் பா.ம.க விலிருந்து மந்திரியானவர் ஒரு தலித் என்பதை தவிர....சரக்கு என்னன்னு தெரிந்து விட்டது....நன்றி ....எப்போதாவது நான் கேட்டதற்கு உண்மையான உருப்படியான பதில் கிடைத்தால் கண்டிப்பாக சொல்லவும்..படித்து தெளிய காத்திருக்கிறேன்...கேள்வி என்னவா???இதோ மீண்டும்....
""""பத்திரிகை துறையில் மேல்சாதி இத்தனை சதவிகிதம்...நீதி துறையில் மேல் சாதி இத்தனை சதவிகிதம் என கணக்கெடுத்துப்போட்டு சமூக நீதிக் காவல் புரியும் குழலி மாதிரி ஆட்கள் வன்னியர் கட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கு எத்தனை இடங்கள் அல்லது தொகுதிகள்(கம்பல்சரி ரிசர்வ்ட் தொகுதிகள் தவிர) அல்லது எத்தனை சதவிகிதம் நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோர் என எடுத்துப்போடட்டுமே...இவர்கள் வரையில் சமூகநீதியை எப்படி கட்டி காப்பாற்றுகிறார்கள் என தெரிந்து விடும் """""
Anony,
nanRi !
//நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் என்கும் தட்டுப்படவில்லை...முதன் முதலில் பா.ம.க விலிருந்து மந்திரியானவர் ஒரு தலித் என்பதை தவிர....
//
Again, குழலி தான் பதில் தர வேண்டும !!!
Post a Comment